தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'முதல்ல இடம் கொடுங்க!'

'முதல்ல இடம் கொடுங்க!'

'முதல்ல இடம் கொடுங்க!'


PUBLISHED ON : செப் 18, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 18, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் ஆர்.டி.ஓ., கனிமொழி தலைமையில் நடந்தது. இதில் பங்கேற்ற விவசாயிகள், அரசு துறை அதிகாரிகளின் அலட்சியம் குறித்து புகார் தெரிவித்தனர்.

ஒரு விவசாயி, 'நகராட்சியில் சாலையோரம் குப்பை கொட்டுகின்றனர். எனவே நோய் பரவும் அபாயம் உள்ளது' என, புகார் தெரிவித்தார். இதனால், கோபமான ஆர்.டி.ஓ., நகராட்சி அலுவலரை சகட்டு மேனிக்கு திட்டினார்.

அப்போது, தன் அருகில் இருந்த வருவாய் துறை அலுவலரிடம், நகராட்சி அலுவலர், 'குப்பை கொட்டுவதற்கு இடம் ஒதுக்கீடு செய்து தருமாறு, 20 ஆண்டுகளாக வருவாய் துறையிடம் கடிதம் கொடுத்து வருகிறோம். நீங்க இதுவரை இடம் காட்டாததால், சாலையோரம் கொட்டி, பின்அப்புறப்படுத்துகிறோம். நீங்க முதல்ல இடம் கொடுங்க... அப்புறம் சாலையோரம் குப்பை கொட்டினால், எங்களை திட்டுங்க...' என முணுமுணுக்க, அவரும் தலையை ஆட்டினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us