PUBLISHED ON : ஆக 13, 2026 01:49 AM

லோக்சபா தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிராக, காங்கிரஸ் சார்பில், சென்னை மேடவாக்கத்தில் சமீபத்தில் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
காலை 10:30 மணிக்கு வர வேண்டிய காங்., தமிழக தலைவர் மாணிக்கம் தாகூர், ஒன்றரை மணி நேரம் தாமதமாக, நண்பகல் 12:00 மணிக்கு தான் வந்து சேர்ந்தார். அதன்பின் பேரணி துவங்கி நடந்தது.
பேரணி முடிந்ததும், மேடவாக்கம் அரசுப் பள்ளி அருகே அமைக்கப்பட்டிருந்த மேடையில், விழிப்புணர்வு தெருக்கூத்து நாடகம் நடந்தது. அப்போது, மேடையில் இருந்த ஒரு கலைஞர், 'ஏம்பா... நம்ம தலைவர் நிகழ்ச்சிக்கு வந்துட்டாரா?' என கேட்க, மற்றொரு கலைஞர், 'அட, நம்ம தலைவர் எப்ப தான் சொன்ன நேரத்துக்கு வந்துருக்காரு...? எப்போதுமே தாமதமாகத் தானே வருவாரு' என்றார்.
இதைக் கேட்ட தொண்டர் ஒருவர், 'என்னப்பா இது... நம்ம தலைவரை குத்திக்காட்டுற மாதிரியே பேசுறாங் களே...' என கூற, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்தனர்.
