தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'தன்னடக்கமா இருக்காரே!'

'தன்னடக்கமா இருக்காரே!'

'தன்னடக்கமா இருக்காரே!'


PUBLISHED ON : நவ 12, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 12, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெரம்பலுார் மாவட்டத்தில், புதிய ஆரம்ப சுகாதாரநிலையங்கள், அரசு தலைமை மருத்துவமனை கட்டடங்கள் திறப்பு விழாவில், அமைச்சர்கள் சுப்பிரமணியன், சிவசங்கர், பெரம்பலுார் தி.மு.க., - எம்.பி., அருண் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அருண் பேசுகையில், 'பெரம்பலுார் மருத்துவ கல்லுாரி திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் இருப்பதாக, சுகாதார அமைச்சரிடம் தெரிவித்தேன். அதற்கு அவர், ஓராண்டாக இத்திட்டத்தை செயல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவித்தார். இங்கு கண்டிப்பாக மருத்துவ கல்லுாரி துவங்கப்படும். அதற்கான பணியை செய்து வருகிறேன்எனவும் தெரிவித்தார். என்னிடம் சொல்ல வேண்டியஅவசியம் இல்லை. நான் சின்ன பையன்; அவர் சீனியர்' என்றார்.

மூத்த நிருபர் ஒருவர், 'தம்பி இவ்வளவு தன்னடக்கமாஇருக்காரே...' என முணுமுணுக்க, மற்றொரு நிருபர், 'தந்தை நேருவோட பயிற்சியா இருக்கும்...' என, 'கமென்ட்' அடித்து சிரித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us