PUBLISHED ON : அக் 08, 2024 12:00 AM

சிவகங்கையில் நடந்த அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் பங்கேற்றார்.
அப்போது பேசுகையில், 'பன்னீர்செல்வத்தை மீண்டும் கட்சியில் சேர்ப்பது குறித்த பேச்சுக்கே இடமில்லை. இரட்டை இலை சின்னம் நம்மிடம் தான் இருக்கிறது. 2026ல் ஆட்சியை பிடிப்பது குறித்து தான் யோசிக்க வேண்டும். பொதுச்செயலர் பழனிசாமியிடம் பேசும்போது, 'பா.ஜ.,வை கூட்டணியில் சேர்த்துக் கொள்ளலாமே' என, சொன்னேன்.
'அவர்களை சேர்த்தால் முதல்வர் பதவியை பிடுங்கி விடுவர். கூட்டணி குறித்து நான் பார்த்துக் கொள்கிறேன்.நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக கட்சி வேலையை பாருங்கள்' என்று கூறிவிட்டார்' என்றார்.
கட்சி நிர்வாகி ஒருவர், 'அமைச்சரா இருந்தப்பவே இருக்கிற இடம் தெரியாம இருப்பார்... அதை அப்படியேதொடராம, பழனிசாமிகிட்ட பா.ஜ., கூட்டணி பற்றி பேசி வாங்கி கட்டியிருப்பாரோ...' என முணுமுணுக்க, அருகில் இருந்தவர்கள் கமுக்கமாக சிரித்தனர்.

