PUBLISHED ON : ஜூன் 04, 2026 12:45 AM

கோவையில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சிவகுமார், பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், 'முதல்வர் விஜயை நினைத்து சந்தோஷப்பட வேண்டும். அவர் வித்தியாசமாக செயல்படுவார் என நம்பி, மக்கள் ஓட்டு போட்டுள்ளனர். அடுத்த தலைமுறை, 'எங்களுக்கு சரியான தலைவன் வேண்டும்' என்று முடிவெடுக்கும்போது, அதை தவறு என்று கூறுவதற்கு நீங்கள் யார்?
'காந்தி காலத்திற்கு முன்பு சமூகத்தில் அரசியல் தலைவர்களின் தாக்கம் அதிகம் இருந்தது. இப்போது, சினிமாத்துறை மக்களுக்கு நெருக்கமாகி விட்டது. கேரளாவில் அனைவரும் படித்தவர்களாக உள்ளனர். அதனால், அங்கு சினிமா அரசியல் எடுபடவில்லை. மக்கள் அறியாமையில் இருக்கும் வரை அரசியல்வாதிகளும், சினிமா துறையினரும் பிழைத்துக் கொள்வர். மக்களுக்கு அறிவு இருந்தால் ஏன் சினிமா பார்க்கின்றனர்' என்றார்.
இதை கேட்ட நிருபர் ஒருவர், 'விஜய் வெற்றியை இவர் வரவேற்கிறாரா, எதிர்க்கிறாரான்னு புரியலையே...' என முணுமுணுக்க, சக நிருபர், 'இவருக்கு கமலே தேவலாம் பா...' என்றபடி நடையை கட்டினார்.
