தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'இவருக்கு 2029 வரை ஆபத்தில்லை!'

'இவருக்கு 2029 வரை ஆபத்தில்லை!'

'இவருக்கு 2029 வரை ஆபத்தில்லை!'


PUBLISHED ON : ஏப் 30, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 30, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நீலகிரி தி.மு.க., - எம்.பி.,யான ஆ.ராஜா, பெரம்பலுாரில் சமீபத்தில் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், 'தமிழகத்தில், கடந்த ஐந்தாண்டுகளில் தி.மு.க., அரசு நிறைவேற்றியுள்ள எண்ணற்ற திட்டங்களை கருத்தில் கொண்டும், முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் செயல்படுத்திய வளர்ச்சி திட்டங் களை பாராட்டும் விதத்திலும், பா.ஜ., போன்ற மதவாத சக்திகளை தமிழகத்துக்குள் விடாமல் தடுக்க, ஸ்டாலினால் மட்டுமே முடியும் என்ற நம்பிக்கையிலும், பெருவாரியான மக்கள் மிகுந்த எழுச்சியுடன் ஓட்டளித்துள்ளனர்.

'பெரம்பலுார் மட்டுமல்ல, தமிழகத்தில், 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தி.மு.க., மீண்டும் வெற்றி பெறும். பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை தமிழக மக்கள் ஓட ஓட விரட்டினர் என்பது தேர்தல் முடிவில் தெரியவரும்' என்றார்.

இதை கேட்ட நிருபர் ஒருவர், 'தி.மு.க., ஜெயித்தாலும், தோற்றாலும் இவரது எம்.பி., பதவிக்கு 2029 வரை எந்த ஆபத்தும் இல்லை' என, முணுமுணுக்க, சக நிருபர்கள் சிரித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us