PUBLISHED ON : மார் 09, 2024 12:00 AM

சென்னை, குன்றத்துாரில் அரசு பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டட திறப்பு விழாவில் சிறு, குறு தொழில் துறை அமைச்சர் அன்பரசன், தி.மு.க., - எம்.பி., பாலு, ஸ்ரீபெரும்புதுார் தொகுதி காங்., - எம்.எல்.ஏ., செல்வபெருந்தகை, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது செல்வபெருந்தகை பேசுகையில், 'காங்கிரஸ் கட்சி மாநில தலைவராக பெறுப்பேற்ற பின் நான் பங்கேற்கும் முதல் பொதுக்கூட்டம் இது' என்றார். தொடர்ந்து பேசிய அவர், மூன்று முறை அந்த நிகழ்ச்சியை, பொதுக்கூட்டம் என குறிப்பிட்டு பேசினார்.
அரசு அதிகாரி ஒருவர், 'அரசு நிகழ்ச்சியை பொதுக்கூட்டம்னு சொல்றாரே...' என, முணுமுணுக்க, மற்றொரு அதிகாரி, 'அவர் உண்மையை தானே சொல்றார்... இப்பல்லாம் அரசு விழா மேடையை பதவியில் இருப்பவர்கள் அரசியல் பேசி, பொதுக்கூட்டமா மாத்திடுறாங்களே...' என, விளக்கம் சொல்லி நகர்ந்தார்.

