PUBLISHED ON : நவ 08, 2024 12:00 AM

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், மாதாந்திரவிவசாயிகள் குறைகேட்பு கூட்டம், கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த விவசாயிகள்,விவசாய சங்க நிர்வாகிகள், பல்வேறு பிரச்னைகள் குறித்து பேசினர்.
சில புகார்கள் குறித்து விவசாயிகள் பேசுகையில், துறை சார்ந்த அதிகாரிகள் பதில் அளித்தனர். அதில் திருப்தியடையாத விவசாயிகள், தொடர்ந்து தங்கள் கருத்துகளை வலியுறுத்திப் பேசியபோது, இரு தரப்பினர்இடையே கடும் வாக்குவாதம் நடந்தது.
சில சிக்கலான பிரச்னைகள் குறித்து விவசாயிகள் பேசியபோது, அதை அப்படியே தவிர்த்து விட்டு, கலெக்டர் அடுத்த விஷயத்துக்கு தாவி விட்டார்.
இதை கவனித்த சில விவசாயிகள், 'கலெக்டர்சிறிய விஷயங்களுக்கு மட்டும் பதில் அளித்துவிட்டு, சீரியசான விஷயங்களை கண்டுக்காம கடந்து போயிட்டாரே... பிழைக்கத் தெரிந்தவர்தான்' என, புலம்பியபடியே நடையைக் கட்டினர்.