தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'த.வெ.க.,வுக்கு தாவிடுவார்!'

 'த.வெ.க.,வுக்கு தாவிடுவார்!'

 'த.வெ.க.,வுக்கு தாவிடுவார்!'


PUBLISHED ON : மே 13, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 13, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் 28 தொகுதிகளில் போட்டியிட்ட காங்., ஐந்து தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றது. ஜெயித்த கையோடு, கூட்டணிக்கு முழுக்கு போட்டுவிட்டு, தமிழக வெற்றி கழக அணிக்கு தாவி விட்டது.

த.வெ.க., ஆட்சி அமைப்பதற்கு காங்., ஆதரவு அளித்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திண்டுக்கல் மாநகராட்சி கிழக்கு மண்டல காங்., தலைவரும், காங்., மாவட்ட துணை தலைவருமான கார்த்திக், தன் ஆதரவாளர்களுடன் தி.மு.க.,வை சேர்ந்த மேயர் இளமதி முன்னிலையில், சமீபத்தில் அக்கட்சியில் இணைந்தார்.

இதை பார்த்த காங்கிரஸ் நிர்வாகி ஒருவர், 'மாநகராட்சியில் தி.மு.க., மேயர் தயவில் காரியங்களை சாதிக்கவே, கார்த்திக் அந்த பக்கம் போயிட்டாரு... அடுத்த தேர்தல்ல மாநகராட்சியை த.வெ.க., பிடிச்சுட்டா, அந்த கட்சிக்கு தாவிடுவாரு...' என புலம்ப, சக தொண்டர்கள் ஆமோதித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us