PUBLISHED ON : மார் 20, 2024 12:00 AM

சென்னை, திருவொற்றியூர் மேற்கு பகுதி அ.தி.மு.க., சார்பில், எண்ணுாரில் நடந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவில், மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான மாதவரம் மூர்த்தி பங்கேற்றார்.
அப்போது அவர் பேசுகையில், 'மக்களுக்காக உழைக்க கூடியவர், மக்களுடன் பழக கூடியவர் என்ற முறையில், ராயபுரம் மனோவை, வடசென்னை எம்.பி., வேட்பாளராக, பொதுச் செயலர் பழனிசாமிநிச்சயம் அறிவிப்பார். அவருக்கு ஓட்டளித்து எம்.பி.,யாக்க வேண்டும்' என்றார்.
மூத்த நிருபர் ஒருவர், 'இதே ஜெயலலிதா இருந்திருந்தால், தலைமை வேட்பாளரை அறிவிக்கும் முன் இப்படி பேசினால் பதவியை பறித்திருப்பார்...' என, முணுமுணுக்க, மற்றொரு நிருபர், 'நம்ம கட்சி இருக்கிற நிலைமையில, எங்க தன்னை வேட்பாளரா நிற்க சொல்லிடுவாங்களோன்னு முந்திக்கிட்டு ராயபுரம் மனோவை இவர் கோர்த்து விடுறார்...' என, 'கமென்ட்' அடித்து சிரித்தார்.

