PUBLISHED ON : ஏப் 02, 2026 03:50 AM

சென்னை, வளசரவாக்கம் வேலன் நகரில்,அ.தி.மு.க., சார்பில், பகுதி செயலர் தாமோதரன் தலைமையில், தெருமுனை பிரசார கூட்டம் சமீபத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில், மதுரவாயல் தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான பெஞ்சமின் பங்கேற்றார்.
முன்னதாக, கூட்டத்தில் வரவேற்று பேசிய தாமோதரன், 'தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. நான் அதிகம் பேச விரும்பவில்லை; நம் வேட்பாளர், அமைச்சர் பெஞ்சமின் உங்களிடம் விரிவாக பேசுவார்' என்று கூறி, அமர்ந்தார்.
இதைக் கேட்ட தொண்டர் ஒருவர், 'முன்னாள் அமைச்சரை, அமைச்சர்னு சொல்றாரே...' என, முணுமுணுத்தார்.
சக தொண்டரோ, 'அட, விடுப்பா... தேர்தல்ல ஜெயித்து, இன்னும் ஒரு மாசத்துல, பெஞ்சமின் அமைச்சராகத் தான் போறாரு... அப்ப சொல்ல வேண்டியதை இப்பவே சொல்லிட்டாரு... நம்ம வெற்றி மேல நமக்கே நம்பிக்கை இல்லன்னா எப்படி...' எனக் கூற, சக தொண்டர்கள் சிரித்தனர்.
