PUBLISHED ON : ஆக 09, 2025 12:00 AM

திருப்பூர், வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில், 'சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன்' சார்பில் கட்டுமான பொருட்கள் கண்காட்சி நடந்தது.
துவக்க விழாவில், திருப்பூர் லோக்சபா தொகுதி இந்திய கம்யூ., கட்சி எம்.பி., சுப்பராயன், திருப்பூர் தெற்கு சட்டசபை தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., செல்வராஜ், திருப்பூர் மாநகராட்சி மேயரான தி.மு.க.,வின் தினேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய, சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷனின் மண்டல தலைவர் ஸ்டாலின் பாரதி, 'இந்த அரசு, எங்களின் பல கோரிக்கைகளை நிறைவேற்றியுள்ளது' என்று குறிப்பிட்டார்.
எம்.எல்.ஏ., செல்வராஜ் பேசும் போது, 'எங்கே எந்த நிகழ்ச்சிக்கு போனாலும் குறைகளையும், கோரிக்கைகளையும் தான் முன்வைக்கின்றனர். இங்கு தான், எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிய அரசு என்று பாராட்டு தெரிவித்துள்ளனர்...' என்றார்.
இதைக் கேட்ட பார்வையாளர் ஒருவர், 'தொகுதி பிரச்னைகளை தீர்க்காம இவங்க அலட்சியமா இருந்தால், மக்கள் எப்படி பாராட்டுவாங்க...' என முணுமுணுக்க, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்தனர்.