PUBLISHED ON : நவ 03, 2024 12:00 AM

லஞ்ச ஒழிப்பு பிரிவு ஏ.எஸ்.பி., திவ்யா தலைமையில்,கோவை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், ஊழல் தடுப்பு மற்றும் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
திவ்யா பேசுகையில், 'வருவாய் துறையில் சான்று வாங்க மக்கள் வந்தால், தராமல் இழுத்தடித்து, கடைசியில் இடைத்தரகர் வாயிலாக லஞ்சம் பெற்றுக் கொண்டே சான்றுகளை கொடுக்கின்றனர். இதற்கு எல்லாம் நீங்கள் இடம் கொடுக்கக் கூடாது. மக்களுக்கான பணிகளை செய்ய வேண்டும்.
'லஞ்ச ஒழிப்பு பணிக்கு வருவாய் துறையில் இருந்து பணியாளர்களை அழைத்தால், வரமாட்டேன் என்கிறீர்கள். எங்களை தவிர்க்கிறீர்கள்; யாருக்கேனும் எங்களோடு பணிபுரிந்த அனுபவம் இருக்கிறதா?' என கேட்டார். யாரும் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தனர். அதற்கு, 'இப்படி இருந்தால் எப்படி?' என்று திவ்யா கேள்வி எழுப்பினார்.
மூத்த நிருபர் ஒருவர், 'லஞ்சம் வாங்குற பணியில்இருப்பவர்களை, லஞ்ச ஒழிப்பு பணிக்கு கூப்பிட்டா எப்படி வருவாங்க...?' என, 'கமென்ட்' அடித்து சிரித்தார்.