PUBLISHED ON : நவ 29, 2026 12:00 AM

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் சில நாட்களுக்கு முன் நடந்த தி.மு.க., நிர்வாக மறுசீரமைப்பு ஆலோசனை கூட்டத்தில், அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்களான பெரியகருப்பன் மற்றும் தமிழரசி இடையே மோதல் ஏற்பட்டது.
தமிழரசியை ஒருமையில் பேசிய பெரியகருப்பன் காரை, தமிழரசி மற்றும் அவரது ஆதரவாளர்கள் சூழ்ந்து வாக்குவாதம் செய்ததால், பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில், அக்கூட்டத்தில் நடந்தது என்ன என்பது குறித்து, பெரியகருப்பன் ஆதரவாளர்களும், தமிழரசி ஆதரவாளர்களும் சமூக வலைதளங்களில் தனித்தனியாக, ‘குற்றம் நடந்தது என்ன...? உண்மை சம்பவத்தின் விளக்கம்’ என தலைப்பிட்டு, மாறி மாறி பதிவு செய்து வருகின்றனர்.
இவற்றை பார்த்த தி.மு.க., தொண்டர்கள், ‘இந்த கோஷ்டிப்பூசலால தான் போன தேர்தல்ல தோற்றுப் போனோம்... இனியும் இவங்க திருந்தலைன்னா, அடுத்து எந்த தேர்தல்லயும் ஜெயிக்க முடியாது’ என, புலம்பினர்.
