PUBLISHED ON : அக் 24, 2024 12:00 AM

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி நகராட்சியில் பருவமழை முன்னெச்சரிக்கைகள் குறித்து, நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேரு, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர், கலெக்டர் பிரபுசங்கர்மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அமைச்சர் நேரு, வெள்ளத் தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் விபரம் கேட்டுக் கொண்டிருந்தபோது, நாசர் குறுக்கிட்டு பேசினார். இதனால், கோபமடைந்த நேரு, 'யோவ்... இருய்யா... அவங்க பேசும் போது குறுக்க பேசிட்டு இருக்க...' என, கடிந்து கொண்டார். இதையடுத்து, நாசர் முகம் வாடி, அமைதியானார்.
இதைப் பார்த்த நாசரின் ஆதரவாளர் ஒருவர், 'பொதுஇடத்தில் சக அமைச்சரை எப்படி நடத்தணும்னு கூட தெரியல... இவரெல்லாம் என்னத்த சீனியர் அமைச்சர்...' என புலம்ப, மற்றொரு ஆதரவாளர், 'நம்ம அண்ணனின் சுயரூபம் தெரியல... சீனியரா இருக்கிறதால, சேரை துாக்காம விட்டாரு...' என, முணுமுணுத்தவாறு நடையை கட்டினார்.