PUBLISHED ON : அக் 22, 2024 12:00 AM

செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில்,திம்மாவரத்தில், ஒன்றிய செயலர் குணசேகரன் தலைமையில் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. முன்னாள்அமைச்சர் பெஞ்சமின், மாவட்ட செயலர் சிட்லபாக்கம்ராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதில், குணசேகரன் பேசுகையில், 'கடந்த லோக்சபாதேர்தலின் போது, நம் தொகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் கூடிய கூட்டத்தை பார்த்து, நமக்கு ஒரு எம்.பி., கிடைத்து விட்டார் என்று தான் அனைவரும்எண்ணினோம்; ஆனால், கூட்டம் நமக்கு ஓட்டுகளாகமாறவில்லை. இதனால், அடுத்தடுத்த தேர்தல்களில்நமக்கு வரும் கூட்டத்தை, அப்படியே ஓட்டுகளாக மாற்ற கடுமையாக உழைக்க வேண்டும்' என்றார்.
இதை கேட்ட கட்சி நிர்வாகி ஒருவர், 'கூட்டத்தை காசு கொடுத்து தான் கூட்டினோம்... அதே மாதிரி காசு கொடுத்திருந்தா ஓட்டும் தானா விழுந்திருக்கும்'என முணுமுணுக்க, மற்றவர்கள் ஆமோதித்து தலையாட்டினர்.

