PUBLISHED ON : ஏப் 08, 2025 12:00 AM

திருப்பூர், கே.எஸ்.சி., அரசு மேல்நிலைப் பள்ளியின் நுாற்றாண்டு விழா நடந்தது.
இதில், இப்பள்ளியின் முன்னாள் மாணவரும், இந்திய கம்யூ., கட்சியின் தற்போதைய திருப்பூர் எம்.பி.,யுமான சுப்பராயன் பேசுகையில், 'பள்ளி நுாற்றாண்டு விழா அழைப்பிதழை படித்தபோது, என் ஆழ்மனதில் நினைவுகள் நிழலாடத் துவங்கின. நான், 1964 முதல் 1967 வரை இப்பள்ளியில் படித்தேன்.
'மாணவராக இருந்துவிட்டால், பள்ளி பருவம் கவலையற்ற பருவம். எந்தவிதமான சிக்கலும், நெருக்கடியும் இல்லாத பருவம். எந்த கவலையும் நெஞ்சில் அண்டாது. அதே நேரம், குறும்பு செய்த மாணவர்களை, கணக்கு வாத்தியார் கிள்ளியதை இன்று நினைத்தாலும் பயமாக உள்ளது' என்றார்.
இதைக் கேட்ட ஆசிரியர் ஒருவர், 'அதெல்லாம் அந்த காலம்... இன்று மாணவர்களை தொடக்கூட முடியாது; மீறி அடித்தால், எங்கள் வேலை போய் விடும்...' என, 'கமென்ட்' அடிக்க, சக ஆசிரியர்கள் ஆமோதித்து சிரித்தனர்.

