/
தினம் தினம்
/
பக்கவாத்தியம்
/
'பா.ம.க.,வுக்கு 'பஞ்ச்' வைக்கிறாரோ?'
/
'பா.ம.க.,வுக்கு 'பஞ்ச்' வைக்கிறாரோ?'
PUBLISHED ON : ஜூலை 19, 2025 12:00 AM

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு ம.தி.மு.க., ஒன்றிய செயலர் வால்டர் ராஜா மகள் திருமண விழாவில், கட்சியின் முதன்மை செயலர் துரை வைகோ பங்கேற்றார்.
அவர் பேசுகையில், 'வால்டர் ராஜா எளிமையான மனிதர்; ஆட்டோ டிரைவர். அவரது குடும்ப விழாவிற்கு வந்ததில் பெரும் மகிழ்ச்சி. மேடையில் ஏறியதும் மணமக்களை, என் காலில் விழுந்து வணங்கும்படி ராஜா கூறினார்; நான் மறுத்தேன்.
'இன்று மட்டுமல்ல... என்றும், யாரும் அரசியல்வாதிகள் காலில் விழக்கூடாது; பெற்றோர் காலில் மட்டுமே விழ வேண்டும். மணமக்களும், பெற்றோரை எப்போதும் தனித்து விடாமல், கடைசி வரை பார்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, மணமகன் தந்தையிடம் சண்டையிடுவது கூடவே கூடாது...' என்றார்.
தொண்டர் ஒருவர், 'அப்பா, மகன் சண்டை போடக்கூடாதுன்னு, பா.ம.க.,வுக்கு, 'பஞ்ச்' வைக்கிறாரோ...' என முணுமுணுக்க, சக தொண்டர்கள் ஆமோதித்தனர்.