தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'அரசு விழாவா; கட்சி நிகழ்ச்சியா?'

 'அரசு விழாவா; கட்சி நிகழ்ச்சியா?'

 'அரசு விழாவா; கட்சி நிகழ்ச்சியா?'


PUBLISHED ON : மார் 16, 2026 02:14 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 16, 2026 02:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில், அறநிலையத்துறை சார்பில், 85 மூத்த தம்பதியினரை கவுரவிக்கும் விழா, சமீபத்தில் நடந்தது.

மானாமதுரை தொகுதி, தி.மு.க., - எம்.எல்.ஏ., தமிழரசி, கோவில் செயல் அலுவலர் ஜென்னி உள்ளிட்டோர் பங்கேற்றனர். எம்.எல்.ஏ., ஆதரவாளரான, தி.மு.க., ஒன்றிய செயலர் கடம்பசாமி, கட்சியினருடன் மேடையில் அமர்ந்திருந்தார்.

விழாவில், தமிழரசி பேசி கொண்டிருந்த போது, மாவட்ட தி.மு.க., துணை செயலர் சேங்கைமாறன் வரவே, அவரும், அவரது ஆதரவாளர்கள் இருவரும், மேடையில் காலியாக இருந்த இரண்டு இருக்கைகளில் அமர்ந்து விட்டனர்.

செயல் அலுவலர் ஜென்னி, இருக்கை இல்லாமல் நின்று கொண்டிருந்தார். அடுத்து, தாசில்தார் ஆனந்தபூபாலன் வர, அவருக்கும் இருக்கை இல்லை. தி.மு.க., நிர்வாகிகள் யாரும் எழுந்து அவருக்கு இடம் தரவில்லை.

இதை பார்த்த பக்தர் ஒருவர், 'இது, அரசு விழாவா, ஆளுங்கட்சி நிகழ்ச்சியான்னு தெரியலையே... இருக்கையை விட்டு எழுந்திருக்காமல் இருக்காங்களே' என முணுமுணுத்தபடியே, அங்கிருந்து நகர்ந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us