/
தினம் தினம்
/
பக்கவாத்தியம்
/
'ஐ.ஏ.எஸ்., அதிகாரின்னா சும்மாவா?'
/
'ஐ.ஏ.எஸ்., அதிகாரின்னா சும்மாவா?'
PUBLISHED ON : டிச 12, 2024 12:00 AM

சென்னை மாநகராட்சி பணிகள் துறை துணை கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி, தென்சென்னை மற்றும்மத்திய சென்னையில் மேற்கொள்ளப்பட்டுள்ள வெள்ளத் தடுப்பு பணிகள், புதிய குளங்கள் அமைக்கும்பணிகள் குறித்து வளசரவாக்கம், அரும்பாக்கம், கிண்டிரேஸ் கிளப் போன்ற பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
ஐந்து இடங்களில் அவர் ஆய்வு மேற்கொண்ட நிலையில், தனியாகவும், குழுவாகவும் என, 'டிவி' நிருபர்கள், 10க்கும் மேற்பட்ட முறை பேட்டி எடுத்தனர். நிருபர்கள் கேட்ட அடுக்கடுக்கான கேள்விகளுக்கு எந்த தடுமாற்றமும் இன்றி, துணை கமிஷனர் தெளிவான பதில்களை கொடுத்தார்.
இதைப் பார்த்த இளம் நிருபர் ஒருவர், 'எல்லா நிருபர்களையும் சூப்பரா சமாளிக்கிறாரே...' என, புருவத்தை உயர்த்த, மூத்த நிருபர் ஒருவர், 'ஐ.ஏ.எஸ்., அதிகாரின்னாசும்மாவா...' என்றபடியே, நடையை கட்டினார்.

