PUBLISHED ON : ஜன 16, 2025 12:00 AM

திருப்பூர், வாலிபாளையத்தில், 'மார்கழி அருள்மழை' தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஆன்மிக சொற்பொழிவாளர் சிவகுமார் பங்கேற்றார்.
அவர், 'குறைவில்லா நிறைவே' எனும் தலைப்பில் பேசுகையில், 'தண்ணீர் பாட்டில் முழுதும் தண்ணீர் நிரப்பி, அதில் கொஞ்சம் குடித்தால் நிறை, குறையும். மீண்டும் நிரப்பினால் நிறையும். அதுபோல தான் இறைவனின் தரிசனமும், திருக்காட்சியும். 'இன்றைக்கு நான், 100 பேருக்கு தான் அப்பாயின்ட்மென்ட் கொடுத்தேன். 101வதாக ஒருவர் வந்தால் நான் பார்க்க மாட்டேன். நாளைக்கு வாங்க' என, சிவபெருமான் ஒரு போதும் சொல்ல மாட்டார். உண்மையான பக்திக்கு என்றுமே இறைவனிடத்தில் கருணை உண்டு' என்றார்.
பார்வையாளர் ஒருவர், 'இவர் சொல்றது கடவுளுக்கு வேணும்னா பொருந்தும்... தாங்கள் தான் கடவுள்னு நினைச்சிட்டு இருக்கிற அரசியல்வாதிகளுக்கு பொருந்துமா...?' என, முணுமுணுத்தவாறு நடையை கட்டினார்.

