PUBLISHED ON : நவ 06, 2026 12:08 AM

அ.தி.மு.க., பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், சமீபத்தில் மதுரையில் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், ‘முன்னாள் அமைச்சர் புதுக்கோட்டை விஜயபாஸ்கர் உட்பட, த.வெ.க.,வுக்கு சென்றவர்களுக்கு எந்த மரியாதையும் இல்லை. அங்கு அவர் 111வது துணை பொதுச் செயலராக உள்ளார். ஒரு கட்சியில் ஒரு பொதுச் செயலர், இரண்டு துணை பொதுச்செயலர்கள் இருப்பர். ஆனால், த.வெ.க.,வில் 110 பேர் உள்ளனர்.
‘அ.தி.மு.க.,வில் இருந்து ஒருசிலர் தான் சென்றுள்ளனர். அவர்களுக்கும், கட்சிக்கும் சம்பந்தம் இல்லை. இந்த அ.தி.மு.க., ரயில், டில்லி செங்கோட்டைக்கு போயிட்டு இருக்கு. ஏறிக்கொண்டால் எல்லாரும் பத்திரமாக போய் சேரலாம்’ என்றார்.
அவரிடம், கோவையில் நடிகை திரிஷா ‘ரோடு ஷோ’ சென்றது குறித்து நிருபர் ஒருவர் கேட்க, ‘ஏம்பா... இதெல்லாம் ஒரு கேள்வியா’ என, ‘டென்ஷன்’ ஆன சீனிவாசன், பேட்டியை முடித்து கொண்டு கிளம்பினார். இதை பார்த்த சீனியர் நிருபர், ‘எப்பவும் ஜாலியா பேசுறவரையே கடுப்பேத்திட்டீங்களே...’ என, முணுமுணுத்தபடியே கிளம்பினார்.
