/
தினம் தினம்
/
பக்கவாத்தியம்
/
'கட்சி வளர்ந்த மாதிரி தெரியலையே!'
/
'கட்சி வளர்ந்த மாதிரி தெரியலையே!'
PUBLISHED ON : மார் 13, 2026 03:02 AM

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே நடந்த பொதுக் கூட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பங்கேற்றார்.
அவர் பேசும்போது, 'வட மாநிலங்களில் நக்சல்களை உள்துறை அமைச்சர் அமித் ஷா கொன்று குவிக்கிறார். அந்த நக்சல்கள் எல்லாம், தலித்துகளுக்காகவும், பழங்குடியின மக்களுக்காகவும் போராடும் போராளிகள். அவர்களுக்கு நில, ஜாதி வரம்பு இல்லை. தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் சத்தீஸ்கர் மாநிலத்திலும், அங்குள்ளவர்கள் இங்கும் வந்து போராடுவர்.
'ஆனால், நம் கட்சி ஆட்கள் அடுத்த மாவட்டத்திற்கு கூட போக மாட்டார்கள். மாவட்டச் செயலரை நியமித்தால், அடுத்த ஒன்றியத்துக்கு கூட செல்வதில்லை. அதனால் தான் பிரித்து, ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் ஒரு மாவட்டச் செயலர் என, சொட்டு நீர் பாசனம் போல் நிர்வாகிகளை நியமித்திருக்கிறேன்' என்றார்.
இதை கேட்ட தொண்டர் ஒருவர், 'சொட்டு நீர் பாசனத்தில் பயிர்கள் நல்லா வளரும்... ஆனா, தென் மாவட்டங்கள்ல நம்ம கட்சி வளர்ந்த மாதிரி தெரியலையே...' என முணுமுணுக்க, சக தொண்டர்கள் ஆமோதித்தனர்.
பக்கவாத்தியம் / 13/03/26 வெள்ளி இதழ்
--------

