PUBLISHED ON : ஜன 31, 2026 03:46 AM

சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், ஆத்துார், ராணிப்பேட்டையில் சமீபத்தில் நடந்தது.
இதில் பங்கேற்ற திரைப்பட நடிகரும், கட்சியின் கொள்கை பரப்பு துணை செயலருமான ரவி மரியா பேசுகையில், 'திரைப்படத்தில் மட்டுமே எனக்கு நடிக்கத் தெரியும். அரசியல் மேடையில் நடிக்க தெரியாது. துணை முதல்வர் உதயநிதிக்கு, அனைத்து இடங்களிலும் நடிக்க மட்டுமே தெரியும்.
'அ.தி.மு.க., தலைமை அனுமதித்தால், தி.மு.க.,வின் உதயநிதியை எதிர்த்து போட்டியிட தயாராக இருக்கிறேன். விருப்ப மனு செய்து, நேர்காணலில் பங்கேற்றுள்ளேன். உதயநிதி எந்த தொகுதியில் போட்டியிட்டாலும், அவரை எதிர்த்து போட்டியிடுவேன்' என்றார்.
கூட்டத்தில் இருந்த முக்கிய நிர்வாகி ஒருவர், 'இப்படி பேசியாவது சீட் வாங்கிடலாம்னு நினைக்கிறாரு போல...' என முணுமுணுக்க, சக தொண்டர்கள் ஆமோதித்தனர்.

