PUBLISHED ON : ஜூன் 25, 2025 12:00 AM

திருச்சி மாவட்ட வளர்ச்சி, கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு குழு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்தில் ஸ்ரீரங்கம் தி.மு.க., - எம்.எல்.ஏ., பழனியாண்டி பேசுகையில், 'முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மணப்பாறை அருகே கண்ணுடையான்பட்டி, சமுத்திரத்துக்கு இரண்டு பாலங்கள் கட்ட அறிவிப்பு வெளியிட்டார். அந்த பாலங்களுக்கான ஒப்புதலை தற்போது போராடி பெற்றுள்ளோம்.
'எனவே, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாலப் பணிகளை வேறு பகுதிகளுக்கு மாற்றக்கூடாது. ஏற்கனவே என் தொகுதியில் உள்ள சமுத்திரம் பகுதிக்கான பாலத்தை, மண்ணச்சநல்லுார் தொகுதிக்கு மாற்றியதால் தான், அமைச்சர் நேரு மீது வருத்தம் வந்தது. அடுத்தவர்கள் சாப்பாட்டை எடுத்து சாப்பிடுவது தவறு என்பது போல, அந்தந்த தொகுதிக்கு வந்த பணிகளை அந்தந்த தொகுதிக்கு செய்ய வேண்டும்...' என்றார்.
இதை கேட்ட நிருபர் ஒருவர், 'வர்ற தேர்தல்ல பழனியாண்டிக்கு, நேரு சீட் வாங்கி தருவாரா என்பது சந்தேகம் தான் பா...' என கூற, சக நிருபர்கள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.