PUBLISHED ON : ஏப் 20, 2025 12:00 AM

சென்னை, கொளத்துாரில், தி.மு.க., சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில், சமீபத்தில் அக்கட்சியில் இணைந்த நடிகர் சத்யராஜின் மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா பங்கேற்று பேசினார்.
அவர் பேசுகையில், 'திராவிட மாடல் ஆட்சியில்தான் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளது. சொகுசு விமானத்தில், நண்பருடன் திருமணத்திற்கு போகும் போலி அரசியல்வாதி அல்ல உதயநிதி. அவர் கடுமையான உழைப்பாளி. மழை வெள்ளம் போன்ற காலகட்டத்திலும் கடுமையாக உழைத்தவர்.
'அவரை எதிர்த்து யார் நின்றாலும் டிபாசிட் பறிபோவது உறுதி. பா.ஜ., அரசிடம் இருந்து மக்களை காப்பாற்ற வந்த மாமன்னன் உதயநிதி. அவர் ஒரு நிஜ ஹீரோ...' என்றார்.
இதைக் கேட்ட நிர்வாகி ஒருவர், 'இப்பதான் கட்சியில் சேர்ந்திருக்காங்க... உதயநிதி தான் கட்சியின் எதிர்காலம் என்பதை கணிச்சு பேசுறாங்களே... நம்மை எல்லாம் துாக்கி சாப்பிட்டுருவாங்க போலிருக்கே...' என, 'கமென்ட்' அடிக்க, சக நிர்வாகிகள் ஆமோதித்தனர்.

