PUBLISHED ON : மார் 12, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க கோவை மாவட்டக்குழு சார்பில், உலக மகளிர் தின சிறப்பு இலக்கிய சந்திப்பு நிகழ்ச்சி, கோவை தாமஸ் கிளப்பில் நடந்தது.
இதில், கவிஞர் கவிதா வரவேற்று பேசுகையில், 'பெண்கள் அனைத்து துறைகளிலும் கால் பதிப்பதுடன், ஆண்களுக்கு இணையாக சாதனை படைத்து வருகின்றனர். மகளிர் தினத்தை நாம் பெரியளவில் கொண்டாடுகிறோம். அதே சமயம், நவ., 19ம் தேதி சர்வதேச ஆண்கள் தினத்துக்கு முக்கியத்துவம் அளித்து கொண்டாடுவதில்லை' என்றார்.
அப்போது, கூட்டத்தில் இருந்து எழுந்த ஒரு குரல், 'அது தியாகிகள் தினம்... அதனால் கொண்டாட மாட்டார்கள்...' என்றதும் அரங்கில் சிரிப்பலை எழுந்தது. மற்றொரு குரலில், 'நீங்க சொல்லி தான் நவ., 19ல் அப்படி ஒரு தினம் இருப்பதே தெரியுதுங்கோ...' என்றதும், அரங்கம் சிரிப்பலையில் அதிர்ந்தது.

