/
தினம் தினம்
/
பக்கவாத்தியம்
/
'கருணாநிதி ஐடியான்னு சொல்லிடுவாரு!'
/
'கருணாநிதி ஐடியான்னு சொல்லிடுவாரு!'
PUBLISHED ON : ஏப் 15, 2025 12:00 AM

உலக தண்ணீர் தினத்தை ஒட்டி, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றியம், சத்ரஞ்செயபுரம் ஊராட்சியில், சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தானம் தலைமை வகித்தார். கலெக்டர் பிரதாப், திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில், சந்திரன் பேசும்போது, 'ஊராட்சிகளில், 100 நாள் வேலை திட்டத்தை, நமது முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்தார். தற்போது, மத்திய அரசு 100 நாள் வேலைக்கு ஊதியம் வழங்காமல் உள்ளது' என, மத்திய அரசை கண்டித்து பேசினார்.
இளம் நிருபர் ஒருவர், '100 நாள் வேலை திட்டத்தை, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தானே கொண்டு வந்தார்... இவர், தப்பா சொல்றாரே...' என முணுமுணுக்க, சீனியர் நிருபர், 'விடுப்பா... கேட்டா, மன்மோகன் சிங்குக்கு அந்த ஐடியாவை கொடுத்ததே கருணாநிதி தான்னு சொன்னாலும் சொல்வாரு...' என்றபடியே கிளம்பினார்.