PUBLISHED ON : ஜன 05, 2025 12:00 AM

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தாலுகா, அனந்தேரி கிராம ஊராட்சி ஒன்றியப் பள்ளியில்,28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இரண்டு வகுப்பறை கட்டடங்களை, முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். இதற்காக, பள்ளியில் நடந்த விழாவில், கும்மிடிப்பூண்டி தொகுதி தி.மு.க., -- எம்.எல்.ஏ., கோவிந்தராஜன் பங்கேற்றார்.
முன்னதாக, பூண்டி பி.டி.ஓ., முரளி பேசுகையில்,'பூண்டி ஒன்றியத்தில், ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கப்படும் நிதியில் கட்டுமானப் பணிகளை குறித்த காலத்தில் முடிப்பதில்லை. முடித்தால் தான், அடுத்த ஆண்டிற்கான நிதியை பெற்று வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முடியும்' என்றார்.
அங்கிருந்த கட்சி நிர்வாகி ஒருவர், 'பணிகளை கண்காணித்து முடிக்க வேண்டியது இவர் தானே... தனக்கும், அதுக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி மேடையில் முழங்குறாரே...' என முணுமுணுக்க,அருகில் இருந்தவர்கள் ஆமோதித்து சிரித்தபடி நடையைக் கட்டினர்.

