தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பக்கவாத்தியம்/‘எம்.எல்.ஏ., பிழைச்சிக்கிடுவாருப்பா!’

‘எம்.எல்.ஏ., பிழைச்சிக்கிடுவாருப்பா!’

‘எம்.எல்.ஏ., பிழைச்சிக்கிடுவாருப்பா!’


PUBLISHED ON : நவ 25, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 25, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை ஆலந்துார் தொகுதியில் உள்ள மாநகராட்சி காந்தி மருத்துவமனை, கடந்த பிப்ரவரி மாதம் தி.மு.க., ஆட்சியில் புனரமைக்கப்பட்டு திறக்கப்பட்டது. அதில், தன்னார்வலர்களுடன் இணைந்து செயல்படும் வகையில், சிறுநீரக நோயாளிகளுக்கான, ‘டயாலிசிஸ்’ பிரிவு அமைக்கப்பட்டது.

ஆட்சி மாற்றத்தால் தாமதம் ஏற்பட்ட நிலையில், ‘டயாலிசிஸ்’ பிரிவு திறப்பு விழா சமீபத்தில் நடந்தது. இதில், ஆலந்துார் த.வெ.க., – எம்.எல்.ஏ., ஹரிஷ், தி.மு.க.,வைச் சேர்ந்த மாநகராட்சி மண்டல குழு தலைவர் சந்திரன், வார்டு கவுன்சிலர் பிருந்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

‘டயாலிசிஸ்’ பிரிவை யார் திறப்பது என்பதில் பிரச்னை ஏற்படலாம் என நிருபர்கள் எதிர்பார்த்தனர். எம்.எல்.ஏ., ஹரிஷிடம் திறக்க கொடுத்த கத்திரிக்கோலை, கவுன்சிலர் பிருந்தாவிடம் கொடுத்து திறந்து வைக்கும்படி கூறினார்.

இதை பார்த்த மூத்த நிருபர் ஒருவர், ‘எம்.எல்.ஏ., பிழைச்சிக்கிடுவாருப்பா’ என்றபடியே அங்கிருந்து நகர்ந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us