PUBLISHED ON : ஆக 26, 2025 12:00 AM

'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்துக்காக, சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., எபிநேசர், புதுவண்ணாரப்பேட்டை இருசப்ப மேஸ்திரி தெருவில் உள்ள மக்களுக்கு அழைப்பு விடுக்கச் சென்றார்.
அங்கிருந்த பெண் ஒருவர், 'மகளிர் உரிமைத் தொகை வரவில்லையே' என கேட்டார். அதற்கு எபிநேசர், 'சொந்த வீடு உள்ளது; உனக்கு எதற்கு மகளிர் உரிமைத் தொகை?' என, ஒருமையில் திட்டி னார்.
இதனால், ஆத்திரமான அப்பகுதி மக்கள் எபிநேசரை சூழ்ந்து, 'தேர்தல் நேரம் மட்டும் தான் வருவீங்களா... சாலைகள் பள்ளம், மேடாக உள்ளன.விலைவாசி உயர்ந்து விட்டது' என, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால், ஆத்திரமடைந்த எபிநேசர், 'என்னிடம் மட்டும் தான் கேள்வி கேட்க முடியும்... நீ என்ன கிழிச்சிடுவ, மென்டல்' என, திட்டிவிட்டு நகர்ந்தார்.
இதை பார்த்த ஒருவர், 'வர்ற தேர்தல்ல, நம்ம மென்டல் வேலையை காட்டிருவோம்...' என்றபடியே நகர்ந்தார்.