PUBLISHED ON : மார் 11, 2024 12:00 AM

திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில், சுகாதார சீர்கேடு உள்ளிட்ட பல புகார்கள் எழுந்ததால், தி.மு.க.,வைச் சேர்ந்த மேயர் தினேஷ்குமார், துணை மேயர் மற்றும் அதிகாரிகளுடன் அங்கு ஆய்வு நடத்தினார். மேயர் ஆய்வுக்கு செல்லும் தகவல், பத்திரிகையாளர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.
பஸ்சுக்கு காத்திருந்த ஒரு பெண்ணிடம் மேயர், 'என்னம்மா, பஸ் ஸ்டாண்ட்டில் போதுமான வசதிகள் இருக்கா... உங்களுக்கு ஏதாச்சும் குறைகள் இருக்கா...' என, கேட்டார். பஸ் ஸ்டாண்டில் கடை, கடையாக சென்ற மேயர், உணவு பண்டங்களின் தரம் குறித்தும் ஆய்வு செய்தார்.
உடன் சென்ற அதிகாரி ஒருவர், 'நம்ம மேயர் கேமராவை பார்த்தாலே ரொம்ப உற்சாகம் ஆகிடுவார். அடிப்படை வசதியை ஆய்வு செய்கிறேன் என்ற பேரில், கடைகளில் பஜ்ஜி, போண்டாவையும் ஒரு கை பார்த்துட்டு இருக்கார்...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.

