PUBLISHED ON : ஏப் 11, 2026 12:00 AM

வேலுார் மாவட்டம், காட்பாடி தொகுதி, தி.மு.க., வேட்பாளர் துரைமுருகனை ஆதரித்து, ஆரிமுத்து மோட்டூரில், துணை முதல்வர் உதயநிதி சமீபத்தில் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசுகையில், 'தேர்தலை காரணம் காட்டி, மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை நிறுத்துவதற்கு, அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும் முயற்சி செய்தன. நம்முடைய தலைவர் ஸ்டாலின் விடுவாரா? அவர்கள் சூழ்ச்சியை முறியடித்து, 1,000 ரூபாய் கொடுத்ததை நிறுத்த பார்க்கிறீர்களா... நான் கொடுக்கிறேன்னு கோடைக்கால சிறப்பு நிதி, 2,000 ரூபாயுடன் சேர்த்து, 5,000 ரூபாயை மகளிருக்கு வழங்கினார்' என்றார்.
இதை கேட்ட ஒரு பெண், 'வருஷா வருஷம் கோடைக்காலம் வருது... போன வருஷம் கோடையில சிறப்பு நிதி தந்தாங்களா... இப்ப மட்டும் குடுத்துட்டு கதை விடுறாங்க... இதை எல்லாம் நம்பி, நாம, இவங்களுக்கு ஓட்டு போடணுமாக்கும்...' என, முணுமுணுத்தபடியே அங்கிருந்து நகர்ந்தார்.
