PUBLISHED ON : அக் 31, 2024 12:00 AM

சென்னை, திருவொற்றியூரில் விஷவாயு கசிவால், தனியார் பள்ளியில் படித்த, 45 மாணவியர், வாந்தி, மயக்கம், மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். திருவொற்றியூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சங்கர், வடசென்னை எம்.பி., கலாநிதி, மாதவரம் எம்.எல்.ஏ., சுதர்சனம் ஆகியோர், பாதிப்பு குறித்து மாணவியரிடம் கேட்டறிந்தனர். அப்போது, அங்கிருந்த நிருபர்களுக்கு சுதர்சனம் பேட்டியளித்தார்.
இளம் நிருபர் ஒருவர், 'இதென்ன கட்சி நிகழ்ச்சியா...இவர் மாவட்ட செயலராக இருந்தாலும், தொகுதிக்கு சம்பந்தமில்லாதவர். இவர் அமைச்சராக இருந்தாலாவதுபேட்டி அளிக்கலாம்; சம்பந்தப்பட்ட எம்.பி., -- எம்.எல்.ஏ., பேட்டி தருவது தானே சரி...' என, முணுமுணுத்தார்.
குசும்புக்கார மற்றொரு நிருபர், 'அட அவருக்கு தான் அமைச்சர் யோகம் இல்லையே... விடுங்க, பேட்டியாவது கொடுத்துட்டு போகட்டும்...'என்றபடியே, நடையை கட்டினார்.

