PUBLISHED ON : ஏப் 13, 2025 12:00 AM

சென்னை வடகிழக்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி சார்பில், 37 இடங்களில் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக, மாவட்ட செயலர் சுதர்சனம் எம்.எல்.ஏ., பங்கேற்றார்.
திருவொற்றியூர் நெடுஞ்சாலையில், தண்ணீர் பந்தல்களை திறக்கும் போது, தி.மு.க., பிரமுகர்கள், தங்களது கார்களை நடுவழியில் வாகன போக்குவரத்து மிகுந்த சாலையில் விட்டு சென்றனர். இதன் காரணமாக, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆளுங்கட்சியினர், போலீஸ் பாதுகாப்புடன் நிகழ்ச்சியை முடித்துவிட்டு, சாவகாசமாக வந்து காரில் ஏறி சென்றனர்.
அரசியல்வாதிகள் கார்களால் நெரிசலில் சிக்கி தவித்த, இரு சக்கர வாகன ஓட்டி ஒருவர், 'வெயிலுக்காக தண்ணீர் பந்தல் திறக்கிறோம்னு, நம்மை வெயில்ல நிறுத்தி மண்டை காய விடுறாங்களே... இவங்க அலப்பறைக்கு ஒரு அளவே இல்லையா...' என, நொந்தபடியே பைக்கை, 'ஸ்டார்ட்' செய்தார்.

