PUBLISHED ON : ஆக 15, 2024 12:00 AM

கிருஷ்ணகிரி அரசு மகளிர் பள்ளியில் நடந்த இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில், கலெக்டர் சரயு பங்கேற்றார்.
அவர் பேசுகையில், 'நான் பள்ளியில் படித்த போது, கேரள மாநிலத்தில் இலவச சைக்கிள் திட்டம் கிடையாது. நான், ஐந்தாம் வகுப்பு முதல் சைக்கிள் வாங்க பணம் சேர்த்து வந்தேன். எட்டாம் வகுப்பு படித்த போது என்னிடம் சேர்ந்த, 1,500ரூபாயுடன் என் தந்தை, 1,000 ரூபாய் கொடுத்து சைக்கிள் வாங்கிக் கொடுத்தார்.'சைக்கிள் வாங்க எனக்கு மூன்று ஆண்டுகள் ஆகின. தமிழக அரசோ, பெற்றோர் தங்கள் பிள்ளைக்கு செய்யும் கடமை போல், மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்குகிறது' என்றார்.
இதை கேட்ட தி.மு.க., நிர்வாகி ஒருவர், 'கலெக்டர் பேச்சுல பின்றாங்களே... நாமெல்லாம் அவங்களிடம் கத்துக்கணும் போலிருக்கு பா...' என முணுமுணுக்க, அருகில் இருந்த நிர்வாகிகள் ஆமோதித்து சிரித்தனர்.