PUBLISHED ON : நவ 18, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஒன்றிய அலுவலக வளாகத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடந்தது. இதில், ஏராளமானோர் பங்கேற்று, மனுக்கள் அளித்தனர்.
ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் ஆண், பெண் அலுவலர்கள் மற்றும் ஊராட்சி செயலர்கள், முகாம் நடந்த இடத்தில் குழுவாக நின்று, மொபைல் போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பல பெண் அலுவலர்கள், முகாம் பணியாளர்களுடன், 'செல்பி' எடுத்துக் கொண்டனர்.
இதை பார்த்த சக ஊழியர் ஒருவர், 'முகாமில் வேலை செய்றாங்களோ, இல்லையோ... போட்டோ எடுத்து, 'வாட்ஸாப்' செயலியில் பதிவிடுவதை தான் பெண் அலுவலர்கள் ரொம்ப ஆர்வம் காட்டுறாங்க...' என்றார்.
மற்றொரு ஊழியர், 'அது சரி... முகாமில் வேலை பார்த்ததுக்கு ஆதாரம் வேண்டாமா...? அதான் இப்படி பண்றாங்க...' என கூறி சிரித்தபடியே, அங்கிருந்து நகர்ந்தார்.

