PUBLISHED ON : அக் 01, 2024 12:00 AM

தமிழக திறன் மேம்பாட்டு கழகம் சார்பில், 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் போட்டி தேர்வுகளுக்கான,உண்டு உறைவிட பயிற்சி மற்றும் குடிமைப்பணிதேர்வுகளுக்கான படிப்பகம் திறப்பு நிகழ்ச்சி, சென்னை, கோட்டூர்புரம் அண்ணா நுாற்றாண்டு நினைவு நுாலகத்தில் நடந்தது.
இதில், தேசிய திறன் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, 20,000 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை காசோலை மற்றும் பரிசுகளை துணை முதல்வர்உதயநிதி வழங்கினார். காசோலை கவரை வாங்கிய மாணவர்கள் இருக்கைக்கு சென்று, அதை பிரித்து பார்த்த போது, வெறும் கவர் மட்டுமே இருந்தது.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளரிடம் கேட்டபோது, அவரும், 'என்ன... காசோலையை காணோமா...?' என, 'ஷாக்' ஆனார். பின், அதிகாரிகளிடம் பேசி விட்டு வந்தவர், 'காசோலை வரும்... போய் உட்காருங்க...' என்றார்.
பரிசு பெற்ற மாணவர் ஒருவர், 'காசோலையை நாம தானே மாத்த முடியும்... இதுவே பணம்னா, 'ஆட்டை'யை போட்டுடுவாங்க...' என, 'கமென்ட்' அடித்து சிரித்தார்.