தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'வரி பணம் மிச்சமாகும்!'

'வரி பணம் மிச்சமாகும்!'

'வரி பணம் மிச்சமாகும்!'


PUBLISHED ON : ஏப் 02, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 02, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய கம்யூ., கட்சியின், 25வது மாவட்ட மாநாடு சேலத்தில் நடந்தது. இதில், அக்கட்சியின் மாநில செயலர் முத்தரசன் பங்கேற்றார்.

மாநாட்டில் முத்தரசன் பேசுகையில், 'அரசியல் ரீதியாக தமிழக அரசுக்கு நெருக்கடி தரப்படுகிறது. தமிழகத்துக்கு தேவையான கல்வி நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும். தற்போது மொத்தம், 543 எம்.பி.,க்கள் உள்ளனர். புது லோக்சபா கட்டடத்தில், 848 இருக்கைகள் போடப்பட்டுள்ளன. இதற்கு என்ன காரணம்... ஏற்கனவே முடிவெடுத்து, அதன்படி நடக்கின்றனர் என்பது தெரிகிறது. எம்.பி.,க்கள் எண்ணிக்கை குறைந்தால் தமிழகம் பாதிக்கும்...' என்றார்.

இதை கேட்ட பொதுஜனம் ஒருவர், 'தமிழகத்திற்குஇப்ப 39 எம்.பி.,க்கள் இருந்தும், எந்த வேலையும்உருப்படியா நடக்கலையே... எம்.பி.,க்கள் குறைஞ்சா மக்களின் வரிப்பணமாவது வீணாகுவது குறையும்...' என, 'கமென்ட்' அடிக்க, அருகில் இருந்தவர்கள், தலையை ஆட்டி ஆமோதித்தபடியே கலைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us