PUBLISHED ON : நவ 11, 2024 12:00 AM

கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட ஆயுர்வேத மருத்துவர்கள் சார்பில், ஒன்பதாவது, தேசிய ஆயுர்வேத தினம், அவினாசிலிங்கம் மகளிர் பல்கலையில் கொண்டாடப்பட்டது.
அப்போது பேசிய, இந்திய முறை மருத்துவத்தை உள்ளடக்கிய, 'இம்ப்காப்ஸ்' நிறுவன தலைவர் கண்ணன், 'பணம், வசதி இருந்தால் மட்டும் போதாது; ஆரோக்கியமான வாழ்க்கை அவசியம். இங்கு மாணவி யர் அதிகம் வந்துள்ளது மகிழ்ச்சிக்குரியது. நீங்கள் எல்லாம் சமையல் அறைக்கு போவீர்களா என்று தெரியவில்லை... நாம் உணவுக்கு பயன்படுத்தும் வெந்தயம், சீரகம், மிளகு என ஒவ்வொன்றுமே மருந்து தான்' என்றார்.
அப்போது, அங்கிருந்த பெண் மருத்துவர்களில் ஒருவர், 'காலம் மாறிப்போச்சு... இளம் வயது பெண்கள் எங்கே சமையல் அறைக்கு போறாங்க... வீட்டில் இருந்த படி, 'ஸ்விக்கி, சொமோட்டோ'ன்னு, ஆன்லைனில், 'ஆர்டர்' செய்து, 'பாஸ்ட் புட்' உணவுகளை தான் வாங்கு றாங்க...' என, முணுமுணுக்க, மற்றொரு மருத்துவர், 'அந்த காலம் மாதிரி இனி வராது...' என, புலம்பியபடி நடந்தார்.