PUBLISHED ON : அக் 19, 2025 12:00 AM

நாமக்கல்லில் நடந்த பா.ஜ., நிகழ்ச்சியில் பங்கேற்ற, மத்திய தகவல் ஒலிபரப்பு துறை இணையமைச்சர் முருகன், பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், 'பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மதுரையில் பிரசார சுற்றுப்பயணத்தை தொடங்கி நடத்தி வருகிறார். இது, தி.மு.க., அரசை வீட்டுக்கு அனுப்பும் சுற்றுப்பயணமாக இருக்கும் .
'கரூரில் நடந்த நெரிசல் பலி வழக்கை, சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் பெரிய தீர்ப்பை வழங்கியுள்ளது. அதுவும் சிறப்பு குழு மேற்பார்வையில் விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், தமிழக அரசு எந்தெந்த இடத்தில் தவறு செய்திருக்கிறது என்பது வெளியே தெரியவரும்...' என்றார்.
இதை கேட்ட நிருபர் ஒருவர், 'கரூர் வழக்கை சி.பி.ஐ.,க்கு கொடுத்ததுல, த.வெ.க.,வினரை விட, பா.ஜ.,வினர் தான் உற்சாகமா இருக்காங்க...' எனக் கூற, சக நிருபர்கள் சிரித்தபடியே கலைந்தனர்.