PUBLISHED ON : டிச 03, 2024 12:00 AM

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, லண்டனில் அரசியல் மேற்படிப்பு முடித்து திரும்பியதும்,முதல் நிகழ்ச்சியாக, 'வாய்ஸ் ஆப் கோவை' நிகழ்ச்சியில்பங்கேற்க வந்தார்.
அவருக்கு கோவை விமான நிலையத்தில், பா.ஜ., விவசாயிகள் அணி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, அண்ணாமலையிடம், விவசாய அணியின் மாநில தலைவர் நாகராஜ், 'சூலுார் பகுதி விவசாயிகள், கெயில் நிறுவனத்தின் குழாய் பதிப்பால், தங்கள் விவசாய நிலம் பாதிக்கப்படுவதை கண்டித்து, போராட்டம் நடத்தி வருகின்றனர்.
'கேரளாவில் சாலையோரத்தில் பதித்தது போல,தமிழகத்திலும் சாலையோரத்தில் குழாய்கள் பதித்து, விவசாயிகள் நிலத்தை பாதுகாக்க வேண்டும்' என, வலியுறுத்தினார்.
அண்ணாமலையும், 'விரைவில் டில்லியில் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளை பார்த்து பேச ஏற்பாடு செய்கிறேன்' என, உறுதி அளித்தார்.
இதனால் உற்சாகமான விவசாயி ஒருவர்,'அண்ணாமலையிடம் பிரச்னையை கொண்டு போயாச்சுல்ல... கண்டிப்பா விடிவுகாலம் பிறந்துடும்...'என்றபடியே கிளம்பினார்.