PUBLISHED ON : ஜூன் 17, 2025 12:00 AM

மஹாராஷ்டிரா மாநில கவர்னராக இருக்கும் சி.பி.ராதாகிருஷ்ணன், சொந்த ஊரான திருப்பூருக்கு அடிக்கடி வந்து செல்வார்; கோவை விமான நிலையத்தில் பேட்டியும் தருவார்.
சமீபத்தில் வந்த ராதாகிருஷ்ணனிடம், நடிகர் கமல்ஹாசனின் மொழி சர்ச்சை பற்றி கேட்டபோது, 'கமலுக்கு எல்லாம் ஒரு கவர்னர் பதில் சொல்லணுமா? அவர் எப்போது ஒழுங்காக பேசியிருக்கிறார்...' என சிடுசிடுத்தார். உடனே, 'கவர்னராக இருப்பவர், அரசியல்வாதியை விமர்சிக்கலாமா?' என, சமூக வலைதளங்களில் சிலர் பதிவிட்டனர்.
சொந்த ஊர் பயணத்தை முடித்துவிட்டு, மீண்டும் மும்பை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்த ராதாகிருஷ்ணனிடம், நிருபர்கள் பேட்டி கேட்டனர்.
அதற்கு, 'மூணு நாளைக்கு ஒரு முறை பேட்டி கொடுக்க வேண்டுமா... அடுத்த முறை பார்க்கலாம்...' என்றபடியே ராதாகிருஷ்ணன் நழுவி விட்டார்.
மூத்த நிருபர் ஒருவர், 'கவர்னர் உஷாராகிட்டாருப்பா...' எனக் கூற, சக நிருபர்கள் ஆமோதித்து சிரித்தனர்.