PUBLISHED ON : ஜன 11, 2026 03:28 AM

தமிழக வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி, ஈரோட்டில் பேட்டி அளித்தார்.
அப்போது அவரிடம் நிருபர் ஒருவர், 'தேர்தலில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகள் கேட்கப்படும், என உதயநிதி கூறியுள்ளாரே... முதியவர்கள் ஒதுங்கி கொண்டு, இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்படுமா?' என கேட்டார்.
அதற்கு பதிலளித்த முத்துசாமி, 'வாய்ப்பு தருவதை கட்சி தலைமை முடிவு செய்யும். இளைஞர்கள் அதிக வாய்ப்பு கேட்பதில், எந்த தப்பும் இல்லை. குடும்பத்தில் ஒருவர் மேஜரானால், சில பொறுப்புகளை அவருக்கு வழங்குவதில்லையா.
'அதுபோல, சில தொகுதிகளில் இளைஞர்கள் போட்டியிட கட்சி வாய்ப்பளித்தால், அவர்களுக்கு மூத்தவர்களும் ஒத்துழைப்பு கொடுப்பர்' என்றார்.
பேட்டி முடிந்ததும், 'மூத்தவர்கள் ஓரமா ஒதுங்கியிருப்பதே, பெரிய ஒத்துழைப்பா இருக்கும்னு உதயநிதி ஆதரவாளர்கள் சொல்லிடுவாங்கப்பா...' என, ஒரு நிருபர், 'கமென்ட்' அடிக்க, சக நிருபர்கள் சிரித்தபடியே நடந்தனர்.
