PUBLISHED ON : நவ 15, 2025 12:00 AM

'ரொக்கம் மற்றும் டிஜிட்டல் முறை மது விற்பனை தொகையில் வேறுபாடு வந்தால், அபராதம் விதிக்கக்கூடாது' என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம் மாவட்டம், சந்தியூரில் உள்ள, 'டாஸ்மாக்' மாவட்ட மேலாளர் அலுவலகத்தில், அதன் ஊழியர்கள் சமீபத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனே மாவட்ட மேலாளர், உயர் அதிகாரிகளுடன் பேசி, அபராதம் விதிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கூறவே, போராட்டத்தை கைவிட்டு, ஊழியர்கள் பணிக்கு செல்ல முற்பட்டனர். முதுநிலை மண்டல மேலாள ரோ, அப்போது தான் பணிக்கு வந்தார்.
இதை பார்த்த டாஸ்மாக் ஊழியர் ஒருவர், 'நாம காலையில் இருந்து போராட்டம் நடத்திட்டு இருந்தோம்... ஆனா, உயர் அதிகாரியான இவர், சொந்த வேலையெல்லாம் முடிச்சிட்டு, மதியம் சாப்பாட்டையும் முடிச்சுட்டு, சாவகாசமா வர்றாரே... இவரை போல் அதிகாரிகள் இருந்தால், அரசு இயந்திரம் எப்படி வேகமா ஓடும்...' என முணுமுணுக்க, சக ஊழியர்கள் ஆமோதித்தபடியே கிளம்பினர்.

