PUBLISHED ON : மே 08, 2026 12:28 AM

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதி, 2011ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பில் உருவானது. 2011 சட்டசபை தேர்தலில், தி.மு.க., சார்பில் செங்குட்டுவன் வெற்றி பெற்றார். ஆனால், அ.தி.மு.க., ஆட்சியில் அமர்ந்தது.
கடந்த 2016 தேர்தலில், தி.மு.க., சார்பில் முருகன் வெற்றி பெற்றார். அப்போதும், அ.தி.மு.க.,வே மீண்டும் ஆட்சியை பிடித்தது. 2021 தேர்தலில், அ.தி.மு.க.,வில் முன்னாள் அமைச்சர் முனுசாமி வெற்றி பெற்றார். ஆனால், தி.மு.க., ஆட்சியில் அமர்ந்தது.
வேப்பனஹள்ளியில் வெற்றி பெறும் கட்சி, தமிழகத்தில் ஆட்சி அமைக்காது என்பது, 'சென்டிமென்ட்' ஆகும். தற்போது நடந்த ஓட்டு எண்ணிக்கையில், நீண்ட இழுபறிக்கு பின் தி.மு.க., வேட்பாளர் சீனிவாசன், 138 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தி.மு.க., ஆட்சியை பறிகொடுத்தது.
மையத்துக்கு வெளியில் காத்திருந்த தி.மு.க., தொண்டர் ஒருவர், 'சீனிவாசன் தோற்று, நாம ஆட்சி அமைக்கணும்னு வேண்டியும் பலிக்காம போயிடுச்சே...' என, முணுமுணுத்தபடியே கிளம்பினார்.
