PUBLISHED ON : மே 12, 2026 12:00 AM

'தி.மு.க.,வின் தோல்விக்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓட்டுகள் இந்த முறை பெருமளவு விழாததும் காரணம்' என்ற தகவல்கள் உலா வருகின்றன. பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தாதது உள்ளிட்ட அரசு ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை தி.மு.க., அரசு கண்டுகொள்ளாததே இதற்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.
தி.மு.க., அரசில், நிதித் துறை செயலராக இருந்தவர் உதயசந்திரன். 'அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை திட்டமிட்டு புறக்கணித்ததில் இவருக்கு பெரும் பங்கு உண்டு' என்பது அரசு ஊழியர்களின் புகார்.
இதனால், 'உதயசூரியனை முடித்து வைத்த உதயசந்திரன்' என்ற பதிவுகளை, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
சென்னை தலைமை செயலகத்தில் இதை பார்த்த ஒரு அரசு ஊழியர், 'விஜய் அரசாவது, நம்ம கோரிக்கைகளை காது கொடுத்து கேட்குதான்னு பார்ப்போம்...' என, முணுமுணுத்தபடியே, கேன்டீனை நோக்கி நடந்தார்.
