PUBLISHED ON : நவ 14, 2026 12:00 AM

பா.ஜ., தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன், சமீபத்தில் திருநெல்வேலியில் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், ‘திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றும் விவகாரத்தில், நீதிமன்ற உத்தரவை மதித்து தமிழக அரசு செயல்பட வேண்டும். திருக்கார்த்திகை நாளில், நீதிமன்ற உத்தரவுப்படி, அரசு தீபம் ஏற்ற வேண்டும்.
‘தமிழகத்தில் ஊழல், கொலை, கொள்ளை, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. பெண்கள், சிறுமியருக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.
‘கடந்த ஆறு மாதங்களில் மக்களின் மனநிலை மாறியுள்ளது. அரசு ஊழியர்கள் பணியாற்ற முடியாத சூழல் நிலவுவதால், 300 பேர் விருப்ப ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளனர்’ என்றார்.
இதைக் கேட்ட நிருபர் ஒருவர், ‘மக்களின் மனநிலை மாறியிருக்கா, இல்லையா என்பது, அடுத்து நடக்கப் போற ஐந்து தொகுதி இடைத்தேர்தலில் தெரிஞ்சிடும்’ என, ‘கமென்ட்’ அடிக்க, சக நிருபர்கள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.
