தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'அடிப்படை வசதிகள் கூட இல்லை...!'

 'அடிப்படை வசதிகள் கூட இல்லை...!'

 'அடிப்படை வசதிகள் கூட இல்லை...!'


PUBLISHED ON : டிச 29, 2025 12:55 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 29, 2025 12:55 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராணிப்பேட்டை மாவட்டம், லாலாபேட்டை பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில், மாணவ - மாணவியருக்கு அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது.

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் மகனும், வேலுார் தி.மு.க., - எம்.பி.,யுமான கதிர் ஆனந்த் மாணவ - மாணவியருக்கு சைக்கிள்களை வழங்கினார்.

பின் அவர் அளித்த பேட்டியில், 'ஸ்மார்ட் வகுப்பறைகளுடன் கூடிய சிறந்த கல்வியை கொடுப்பது தமிழகம் தான். தமிழக மாணவர்களுக்கு நல்லது செய்யவே அவதாரம் எடுத்தவர், நம் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ். இத்துறைக்கு அவர் பல நன்மைகளை செய்துள்ளார்...' என்றார்.

இதை கேட்ட மாணவர் ஒருவர், 'பல பள்ளிகள்ல அடிப்படை வசதிகளே இல்லை... இவர் பேசுறதை பார்ரா...' என, முணுமுணுக்க, சக மாணவர்கள் சிரித்தபடியே நகர்ந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us