PUBLISHED ON : அக் 25, 2025 12:00 AM

சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலம், தியாகராஜ சுவாமி கோவில் பின்புறம், தெருநாய்களுக்கு, 'ரேபிஸ்' தடுப்பூசி போடும் நிகழ்ச்சி நடந்தது.
இதில், மாநகராட்சியின் வடக்கு வட்டார துணை கமிஷனர் கட்டா ரவி தேஜா, திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் தனியரசு, பொறுப்பு உதவி கமிஷனர் பாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர்.
நாய் பிடிக்க பிரத்யேகமாக பயிற்சி பெற்ற குழுவினர், தெருநாயை லாவகமாக வலையில் பிடிக்க, கால்நடை மருத்துவர் தடுப்பூசி செலுத்தினார்.
இதை வேடிக்கை பார்த்த வாலிபர் ஒருவர், 'தினமும் இரவு நேரத்தில் வேலை முடித்து, பைக்கில் வர்றப்ப, விரட்டி விரட்டி கடிக்க பாய்ந்தது இந்த நாய்தான்... இனி யாரையும் கடிக்காதுல்ல...' என, மாநகராட்சி ஊழியரிடம் கேட்டார்.
அந்த ஊழியரோ, 'தம்பி, நாய் கடிக்காதுன்னு உத்தரவாதம் எல்லாம் தர முடியாது... எதுக்கும் ஜாக்கிரதையாவே போங்க...' எனக் கூற, வாலிபர் மிரட்சியுடன் அங்கிருந்து நகர்ந்தார்.

